தெலங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர் மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானா, 18 ஜூன் (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்தின் சிர்சில்லா பகுதியில் பானிபூரி சாப்பிட்ட 24-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பானிபூரி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு வயிற்று
பானிபூரி


தெலங்கானா, 18 ஜூன் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்தின் சிர்சில்லா பகுதியில் பானிபூரி சாப்பிட்ட 24-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பானிபூரி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பானிபூரியில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் அல்லது உணவுப் பொருட்கள் மாசுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தையடுத்து பொதுமக்கள் தெருவோர உணவுகளை சாப்பிடும்போது சுகாதாரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P