இ-கேபினெட் முறை அறிமுகம் - தெலங்கானா அரசு அறிவிப்பு
ஹைதராபாத் , 18 ஜூன் (ஹி.ச.) தெலங்கானா அரசு, அமைச்சரவை கூட்டங்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தும் வகையில் இ-கேபினெட் (e-Cabinet) முறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அறிக்கையில் கூறுவது : தற்போது உ
A


ஹைதராபாத் , 18 ஜூன் (ஹி.ச.)

தெலங்கானா அரசு, அமைச்சரவை கூட்டங்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தும் வகையில் இ-கேபினெட் (e-Cabinet) முறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து

முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அறிக்கையில் கூறுவது :

தற்போது உத்தரகாண்ட்

மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இந்த டிஜிட்டல் அமைச்சரவை முறை, தெலங்கானாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.2 கோடி செலவில் தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக NICSI (National Informatics Centre Services Inc.) உடன் அரசு ஆலோசனைகள் நடத்தி வருகிறது. திட்டத்தின் செயல்பாட்டிற்காக தெலுங்கானா ஸ்டேட் டெக்னாலஜி சர்வீஸ்

நொடல் அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக ரூ.20 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

புதிய இ-கேபினெட் முறையின் மூலம் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டேப்லெட் மற்றும் கணினி வழியாக அமைச்சரவை அஜெண்டா, கோப்புகள் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட முடியும்.

மேலும் அமைச்சரவை குறிப்புகள், பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்படும்.

இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தரவு பாதுகாப்பை உறுதி செய்ய தனிப்பட்ட லாகின் ஐடி, கடவுச்சொல் உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த புதிய நடைமுறை மூலம் காகித பயன்பாடு குறைந்து, நிர்வாக செயல்முறைகள் மேலும் நவீனமயமாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA