Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 18 ஜூன் (ஹி.ச.)
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண் தனது தந்தைக்காக காத்திருந்தார்.
அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர் அந்த பெண்ணிடம் கிண்டல் செய்து ஈவ்டீசிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆனந்த், தமிழக வெற்றி கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.
சம்பவத்தின் போது அங்கு வந்த பெண்ணின் தந்தை, தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் இருவரின் இருசக்கர வாகன சாவியை பறிமுதல் செய்து, மகளுடன் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆனந்த் மற்றும் அசோக் ஆகிய இருவரையும் பெண்களை கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P