Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
விசாரணை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொடூரமான முறையில் நடந்த இந்த குற்றச்செயலுக்கு உச்சபட்ச தண்டனையே பொருத்தமானது என்றும், சமூகத்தில் இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்படுகிறது.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள், தடயவியல் அறிக்கைகள் மற்றும் குற்றத்தின் தன்மை குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
விளாத்திகுளத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b