தெலங்கானாவில் நின்றிருந்த மினி லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
ஜனகாம், 18 ஜூன் (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வாகனத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து ஜனகாம் காவல்துறையினர் தெ
goods lorry collided with a stationary mini-lorry


ஜனகாம், 18 ஜூன் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வாகனத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து ஜனகாம் காவல்துறையினர் தெரிவித்ததாவது,

டயர் வெடித்ததால் சாலையோரம் நிறுத்தி மினி லாரியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வளைவில் திரும்பிய சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறினர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜனகாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வளைவுப் பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும், நெடுஞ்சாலைகளில் வாகனத்தை நிறுத்தி பழுதுபார்க்கும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b