செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்கள் டிராக்டர் ஏற்றி அழிப்பு - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
நெல்லை, 19 ஜூன் (ஹி.ச.) நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வந்த மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் ரசாயனங்கள் மூலம
1.5 tonnes of artificially ripened mangoes destroyed


நெல்லை, 19 ஜூன் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வந்த மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் ரசாயனங்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சுமார் 1.5 டன் எடையுள்ள செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் அனைத்தும் டிராக்டரில் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பாக கொண்டு சென்று அழிக்கப்பட்டன.

தொடர்ந்து, குடோன் உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பழங்களை வாங்கும்போது இயற்கையாக பழுத்த பழங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும், சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் பழக்கடைகள் மற்றும் குடோன்களில் தொடர்ந்து திடீர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b