Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 19 ஜூன் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 82 ஆயிரத்து 438 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களில் 39 ஆயிரத்து 948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
அன்று ஒரே நாளில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 24 லட்சமாக பதிவாகியுள்ளது. மேலும், கோவிலில் 4.16 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.
அதேபோல், 2.14 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA