3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட பிபின் மஞ்சியை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
திருவள்ளூர், 19 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட குழந்தைஜூன் 15 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையை பாலியல் வன
Case involving the sexual assault of a 3-year-old child


திருவள்ளூர், 19 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு புதரில் வீசப்பட்ட சம்பவத்தில் மீட்கப்பட்ட குழந்தைஜூன் 15 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சி என்ற 19 வயது கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

குழந்தைக்கு எதிரான கொடூர சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பீகார் இளைஞன் பிபின் மஞ்சி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளியை வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் பிபின் மஞ்சியை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை திரட்டவும் சம்பவம் தொடர்பான முழு விவரங்களை பெறவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b