Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச)
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து ரூ. 1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இனிமேல் ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்று சோர்வடைந்திருந்த நகைப் பிரியர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
இன்றைய விலை மாற்றம். கடந்த சில நாட்களாக சவரனுக்கு ரூ. 240 ஏறுவதும் குறைவதுமாக இருந்த தங்கம் விலையானது, ஈரான் - அமெரிக்கா போர் முடிவால் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது வரை டாலர் மதிப்பு நல்ல நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற மற்ற வர்த்தகங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் இன்று தங்கம் விலை தடாலடியாக குறைந்திருக்கிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 10-ஆம் தேதி சவரனுக்கு ரூ. 3,200 குறைந்த நிலையில், அடுத்த நாள் மீண்டும் ரூ. 2,400 குறைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சவரன் விலையானது ரூ. 1.10 லட்சத்திற்கும் கீழ் சென்றது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3 ஆயிரத்துக்கும் மேல் குறைந்து மீண்டும் சவரன் விலை 1.10 லட்சத்திற்கும் கீழ் சென்றிருக்கிறது.
நேற்று (ஜூன் 18) காலை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 அதிகரித்து, மாலை ரூ. 110 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,950-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, நேற்று காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து மாலை ரூ. 880 குறைந்து ரூ. 1,11,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 3,040 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையானது நேற்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 270-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 255-க்கு விற்கப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN