சென்னை ஒன் செயலியில் புதிய CUMTA UPI சேவை - ரூ.1-க்கு முதல் பயணச்சீட்டு
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) சென்னையில் பொது போக்குவரத்தை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை ஒன் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
Cumta


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் பொது போக்குவரத்தை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, சென்னை ஒன் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CUMTA UPI கட்டண முறையை பயன்படுத்தி பணம் செலுத்தும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டண முறையின் மூலம் முதன்முறையாக வாங்கப்படும் பயணச்சீட்டு வெறும் ரூ.1-க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதனைத் தொடர்ந்து வாங்கப்படும் அடுத்த 6 பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் CUMTA அறிவித்துள்ளது.

CUMTA UPI என்பது ஒரே கிளிக்கில் கட்டணம் செலுத்தும் வசதியாகும். வழக்கமான UPI பரிவர்த்தனைக்கு சுமார் 60 நொடிகள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய முறையில் சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் வாங்குவதற்கு வெறும் 5 நொடிகள் மட்டுமே தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே இந்த புதிய கட்டண முறையை பிரபலப்படுத்தும் நோக்கில், தொடக்ககால சலுகையாக ரூ.1 பயணச்சீட்டு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக CUMTA தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ