Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு தேமுதிக முழு ஆதரவு தெரிவித்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நீர்வளப் பிரச்சினைகள் சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழகத்திற்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக குறிப்பிட்டார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பாதிக்கும் வகையில் கர்நாடகா மேற்கொள்ளும் எந்தத் திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தேமுதிக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், காவிரி நீர்ப் பங்கீட்டு உரிமையை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தேமுதிக துணைநிற்கும் என்றும் பிரேமலதா கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam