தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அந்தியூரில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, 19 ஜூன் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பா
ஆர்ப்பாட்டம்


ஈரோடு, 19 ஜூன் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தேர்தலின்போது தவெக அரசு அளித்த வாக்குறுதிகளின்படி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

மேலும், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு பயிர்க் கடனும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், அரசு தங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam