Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இது தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச்சினை.
மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும், அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முடியும்.
மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கை திறமையான, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை கொண்டு வலுவாக வாதாடினால் மட்டுமே மேகதாது பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள முடியும்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இதுவரை நான் 37 முறைக்கும் மேல் பேசியுள்ளளேன். தமிழகத்தின் நீர் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b