மேகதாது அணை விவகாரம், தமிழக சட்டமன்றத்தின் ஒருமித்த நிலைப்பாடு - கமல்ஹாசன் பாராட்டு
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக முனைவதற்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில
Kamal


Ka


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக முனைவதற்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் விவகாரங்களில் இதுபோன்ற ஒற்றுமை தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ