Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஜூன் (ஹி.ச.)
கோவை அவிநாசி சாலை நீலாம்பூர் பகுதியில் இன்று திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கே.எம்.எஸ். என்ற தனியார் பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக சென்ற பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam