சட்டப்பேரவை நேரலைத் துண்டிப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது சட்டப்பேர
Nainar


Jj


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது சட்டப்பேரவை நேரலை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'மாற்றத்திற்கான ஆட்சி' என்று கூறிவிட்டு, கடந்தகால திமுக ஆட்சியைப் போலவே தங்களுக்குச் சாதகமான பகுதிகளை மட்டும் நேரலை செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களையோ அல்லது தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துகளையோ ஒளிபரப்பாமல் தவிர்ப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் மற்றும் விவாதங்களை நேரடியாகக் காணும் உரிமை தமிழக மக்களுக்கு இருப்பதாகவும், அதனைத் தடுப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசியல் காரணங்களுக்காக நேரலையைத் துண்டிக்கும் அல்லது தணிக்கை செய்யும் போக்கைக் கைவிட்டு, சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசையும், பேரவைத் தலைவரையும் வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ