Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 19 ஜூன் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA