மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி,ஜனநாயகத்தை காக்க இணைந்து போராடுவோம் - ராகுல் காந்தி
சென்னை, 19 ஜூன் (ஹி.ச) தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “திரு எம்.
Mks


Hh


சென்னை, 19 ஜூன் (ஹி.ச)

தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,

“திரு எம்.கே. ஸ்டாலின் அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா எனும் கருத்தையும், நமது அரசியலமைப்பையும், கூட்டாட்சி முறையையும் பாதுகாப்பதற்கான நமது ஒன்றுபட்ட உறுதிப்பாடு நமக்குத் தொடர்ந்து வழிகாட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம்.

நாம் வெற்றி பெறும் வரை இதை ஒன்றிணைந்து நடத்துவோம் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ