Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று பேரவைத் தலைவர் எம். அப்பாவு தலைமையில் தொடங்கியது.
அமர்வு தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்வில் பங்களிப்பு செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசுவாமி, வீராசாமி, சுப்பிரமணியம், ஆறுமுகம், கண்ணன் உள்ளிட்டோரின் மறைவுக்கு பேரவை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி. விசுவநாதன், கே. ராஜன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரின் மறைவுக்கும் பேரவை ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தது.
இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் எம். அப்பாவு வாசித்ததைத் தொடர்ந்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்களது இருக்கைகளில் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் இரங்கல் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மறைந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் பொதுவாழ்வுப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பேரவை, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தது.
இரங்கல் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் சட்டப்பேரவை அலுவல்கள் வழக்கம்போல தொடங்கின.
Hindusthan Samachar / GOKILA arumugam