Enter your Email Address to subscribe to our newsletters

உதகை, 19 ஜூன் (ஹி.ச.)
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரண்டு நாள் பயணமாக இன்று
(ஜூன் 19) நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தருகிறார்.
அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக உதகை வரும் ஆளுநர், இன்று மாலை 4 மணியளவில் உதகை தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையான மக்கள் பவனில் தங்குகிறார்.
உதகையில் இன்றிரவு தங்கும் ஆளுநர் அர்லேகர், நாளை சனிக்கிழமை காலை கோவைக்கு புறப்படுகிறார்.
நாளை ஜூன் 20 ஆம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்வில் ஆளுநர் யோகா தின நிகழ்ச்சிகளை முறைப்படி தொடங்கி வைத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
ஆளுநரின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உதகை மற்றும் கோவையில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b