அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த மகளிர் குழுவை சேர்ந்த 2 ஊழியர்கள் நீக்கம்
தூத்துக்குடி, 19 ஜூன் (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லி தனியார் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு சாப்பிட வருபவர்களுக்கு இ
Amma Unavagam


தூத்துக்குடி, 19 ஜூன் (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லி தனியார் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன்,

நகராட்சி ஆணையர் சுகந்தி ஆகியோர்

அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பார்சல் வழங்க தடை விதித்தது மட்டுமின்றி, உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் பணியாற்றிய மகளிர் குழுவை சேர்ந்த கங்கா, சங்கரேஸ்வரி ஆகிய இருவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அம்மா உணவகத்தில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.பார்சல் வழங்கப்படாது என்றும், புகார் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் குறித்தும் அம்மா உணவகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையர் சுகந்தி கூறுகையில்,

அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை மகளிர் சுய உதவி குழு மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

புகாரைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு தீர்மானம் மூலமாக கங்கா, சங்கரேஸ்வரி ஆகிய இருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN