மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்
TTV Dhinakaran


Hh


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் பிரத்தியேக நடுவர் நீதிமன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கருத்தை ஏற்று, அதனைத் தீர்மானத்தில் திருத்தமாக இணைத்த முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தீர்மானத்திற்கு கொள்கை அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதேவேளையில், தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் வலியுறுத்தப்பட்ட அனைத்து அம்சங்களும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், டெல்டா மாவட்டங்களின் நீர்வளப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ