Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
மக்களவை எதிர்க்கட்சித தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றார்.
அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலயில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b