2வது டி20 -வங்காளதேசம் - ஆஸ்திரேலியா இன்று மோதல்
டாக்கா , 19 ஜூன் (ஹி.ச.) வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளில் வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொ
A


டாக்கா , 19 ஜூன் (ஹி.ச.)

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளில் வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று டாக்காவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலியா அணி களம் காண உள்ளது.

அதேவேளை, முதல் போட்டித் தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் வங்காளதேச அணி களமிறங்குகிறது.

எனவே, இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA