பள்ளி வளாகத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - ஓட்டுநர் கைது
சேலம், 19 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று காலை வேளையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிட்ட பின்னர், ஓட்டுநர் ரங்கநாதன் வாகனத்தை கவனக்குறைவாக இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாரா
பள்ளி வளாகத்தில்  வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு -  ஓட்டுநர் கைது


சேலம், 19 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று காலை வேளையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிட்ட பின்னர், ஓட்டுநர் ரங்கநாதன் வாகனத்தை கவனக்குறைவாக இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த மாணவி மோகனா வேனின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்.

பலத்த காயமடைந்த நிலையில் இருந்த சிறுமியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏற்காடு காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, வேன் ஓட்டுநர் ரங்கநாதனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமியின் உயிரிழப்பு சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகங்களில் வாகனங்களை இயக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b