Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 ஜூன் (ஹி.ச.)
கர்நாடகாவில் துடிப்பான இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
இதனால், இளைஞர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகரித்தது.
தமிழக அரசியலில் அண்ணாமலையும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
இதற்கிடையே, தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு, தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
மாநில தலைவர் பதவி இல்லாததால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, கட்சியின் எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.
கட்சியில் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த ‘மும்மொழி கொள்கை’ திட்டத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்தார்.
இந்நிலையில், அண்ணாமலை நேற்று மாலை 5 மணிக்கு அவசர பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்களை சந்தித்த பின் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு
அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் அடுத்தகட்ட நகர்வு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b