Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 02 ஜூன் (ஹி.ச.)
ஜாதி, மதம் மற்றும் ஊழலை ஒழித்துவிட்டதாக அரசு கூறும் நிலையில், வேட்பாளர் தேர்வுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரும், திமுக மூத்த தலைவருமான அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மயிலாப்பூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் யார்? அதில் ஜாதி, மத அடையாளங்கள் இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “திருச்சி கிழக்கு தொகுதியில் தாங்களே போட்டியிட்டீர்கள். அதில் மத அடையாளம் இல்லையா? தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை பார்த்தாலே, ஜாதி மற்றும் மத அரசியல் செழித்து வளர்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது” என விமர்சித்துள்ளார்.
அதேபோல், முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை உடைத்து, 25 சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது ஜனநாயக படுகொலை அல்லவா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை “ஊழல் ஒழிப்பு” எனக் கூற முடியுமா? தூய எண்ணம் கொண்ட முதல்வர் மேற்கொள்ளும் செயலாக இதை ஏற்க முடியுமா என்றும் தனது பதிவில் அவர் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam