Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுவார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவியது.
அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான பிறகு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அதுகுறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
முகநூல் நேரலையில் பேசிய அவர்,
திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் அமைச்சரவையில் இடம்பெற முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதலமைச்சரிடமும் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன் என கூறினார்.
அத்துடன், நாங்கள் அமைச்சரவையில் இணைந்தால் ஆட்சிக்கு கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என தவெக தலைவர்கள் எண்ணினார்கள் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இதன் மூலம், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் களமிறங்குவார் என்ற தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P