Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், தென்மேற்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி நாள்தோறும் துறை சார்ந்த ஆய்வுகளை அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு துறையிலும் ஒரு மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், பல்வேறு பணிகளை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம்.
அதன்படி தென்மேற்கு பருவமழை தற்பொழுது அந்தமானில் ஒரு வார காலமாக பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு கேரளாவிலும் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகே உள்ள நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில், வரும் நாட்களில் எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்பதை ரேடார் கருவுகள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
24 மணிநேரமும் தயார் நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரிடர் பணிகளை விரைந்து செயல்படுத்த, பல்வேறு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் மாவட்ட வாரியாக தயார் நிலையில் உள்ளனர்.
மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் மூலமாகவும் பேரிடர் பணிகளை செய்ய தயாராக உள்ளோம். குறிப்பாக, மழை சீற்றங்கள் வரும் பொழுதெல்லாம் தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களுக்கு பாதுகாப்பான முறையில் பணிகளை செய்ய இந்தத் துறை வேகமாக விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இப்பொழுதுதான் துவங்கி உள்ளது. தர்மபுரி பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதுவரை எந்தவித சேதமும் இல்லை. மழையின் அளவை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். அப்பகுதிகளில் வெப்பநிலை தற்பொழுது குறைந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 4ஆம் தேதி அன்று வெப்பநிலை குறைந்திருக்கும்.
தமிழ்நாட்டில் இதுவரை வெயிலின் தாக்கத்தால் ஒருவர் கூட இறக்கவில்லை. வெயில் தாக்கம் காரணமாகவே பள்ளிகள் திறக்கும் தேதி 1-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதியாக தள்ளிவைக்கப்பட்டது. 40% ஆக இருந்த வெப்பநிலை, தற்பொழுது 35-ஆக குறைந்துள்ளது. வெப்பநிலை இன்றி மிதமான சூழல் காணப்படுகிறது. ஆகவே பள்ளி திறப்பதில் எந்த தடையும் இல்லை.
தென்மேற்கு பருவ மழையால் நீலகிரி மாவட்டத்தில் தான் மலைச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்.
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரவை போன்று தமிழ்நாட்டில் எப்பொழுதும் ஏற்படாது.
ஆகவே கவலைப்பட தேவையில்லை என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN