கொழுக்குமலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் மீட்பு
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த திராவினேஷ் (வயது 25) உள்பட 15 பேர் கொண்ட குழுவினர், கேரளம் மாநிலம், மூணாறுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, திராவினேஷ் தனது நண்பர்களுடன் காதல் தோல்வி மற்றும் குடும்பப் ப
Chennai Younger


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த திராவினேஷ்

(வயது 25) உள்பட 15 பேர் கொண்ட குழுவினர், கேரளம் மாநிலம், மூணாறுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, திராவினேஷ் தனது நண்பர்களுடன் காதல் தோல்வி மற்றும் குடும்பப் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து மனவேதனையுடன் பேசி கொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று

(ஜூன் 2) காலை 7 மணியளவில் சின்னக்கானலில் உள்ள கொழுக்குமலையில் 'சிம்ஹாப்பாறை காட்சி முனை'யில்

(Simhapara View Point) நின்றபடி இயற்கைக் காட்சிகளை திராவினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ரசித்து கொண்டிருந்தார்.

அப்போது திராவினேஷ் திடீரென மலையில் இருந்து குதித்தார்.

அப்போது அங்கிருந்த அவரது நண்பர்கள் பதறியடித்தபடி ஓடி வருவதற்குள் திராவினேஷ் கீழே சென்று விட்டார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, மூணாறு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கினர்.

எனினும், செங்குத்தான பாதை மற்றும் ஆழம் அதிகம் என்பதால் மீட்புப் பணிகள் வீரர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது.

கடும் முயற்சிக்கிடையே உயிரைப் பணயம் வைத்து கயிறு மூலம் 700 அடி ஆழம் வரை சென்ற தீயணைப்பு வீரர்கள், இளைஞர் திராவினேஷின் உடலை தேடிக் கண்டுபிடித்தனர்.

பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு திராவினேஷின் உடல் கயிறு மூலம் மேலே கொண்டு வரப்பட்டது. தகவலறிந்து வந்த சந்தனப்பாறை காவல் துறையினர் (Santhanpara Police Station), உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் திராவினேஷின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் திராவினேஷ் மலையில் இருந்து கீழே விழும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN