Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 ஜூன் (ஹி.ச.)
கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்த நிலையில் கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே தமிழக மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகளை காவல் துறையினர் தீவிரமாக சோதனை செய்தனர்.
மேலும் அதில் பயணித்த பயணிகளின் உடைமைகள் பார்சல் அலுவலகங்களிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் ஆம்னி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் போதை பொருட்கள் பார்சல்களை அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN