Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 02 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஜூன் 5 மற்றும் 6: சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி, முன்னாள்/தற்போதைய ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள்).
ஜூன் 8 (திங்கட்கிழமை): கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் (சுழற்சி 1 மற்றும் 2).
ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை): வணிகவியல்
(சுழற்சி 1 மற்றும் 2).
ஜூன் 10 (புதன்கிழமை): வணிக நிர்வாகவியல் (BBA).
ஜூன் 11 (வியாழக்கிழமை): தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகள்.
கலந்தாய்விற்கு வரும் மாணவிகள் தங்களது இணையதள விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் அசல் (Original) மற்றும் 3 செட் நகல்களை (Xerox) கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்:
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்,மாற்றுச் சான்றிதழ் (TC) மற்றும் சாதிச் சான்றிதழ் (Community Certificate), வருமானச் சான்றிதழ் (Income Certificate), அடையாள அட்டைகள் (ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு).
வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Passbook) முதல் பக்க நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
தகுதியுள்ள மாணவிகள் தங்களது பெற்றோருடன், குறிப்பிட்ட கலந்தாய்வு நாட்களில் காலை 9.30 மணிக்கு தவறாமல் கல்லூரிக்கு வருகை தந்து இந்த சேர்க்கை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜோசப் சுரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b