மதுரை மாமன்றத்தில் திமுக கவுன்சிலர்கள் கடும் அமளி
மதுரை, 02 ஜூன் (ஹி.ச.) தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விதித்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநகராட்சி கவுன்சிலர்கள் 50 கோடி ரூபா
மதுரை மாமன்றத்தில் திமுக கவுன்சிலர்கள் கடும் அமளி


மதுரை, 02 ஜூன் (ஹி.ச.)

தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விதித்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக அமைச்சர் நிர்மல் குமார் பொது வெளியில் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள், மாமன்றக் கூட்டம் தொடங்கியதும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.

அமைச்சர் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஆதாரமின்றி பொறுப்பான பதவியில் இருப்பவர் இவ்வாறு பேசுவது மக்கள் பிரதிநிதிகளின் மாண்புக்கு இழுக்கு என்றும், மாநகராட்சி நிர்வாகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து முழக்கமிட்டதால் மாமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Hindusthan Samachar / vidya.b