Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 02 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்புளிக்கை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சார்பு ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட உள்ளது.
விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அம்புளிக்கை காவல் நிலையத்தின் கூடுதல் பொறுப்பு தற்காலிகமாக அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வழியாக ஆபாசமாக மெசேஜ் அனுப்பி அத்து மீறியது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது லியோனி ரஞ்சித்குமார் மீது பாய்ந்துள்ள இந்த பணியிடை நீக்க நடவடிக்கை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b