கணவரை தாக்கிய போலீசை கண்டித்து ரோட்டில் அமர்ந்து பெண் தர்ணா
திண்டுக்கல், 02 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் அருகே தனது கணவரை தாக்கிய நபர்கள் மீது நான்கு நாட்களாக நடவடிக்கை எடுக்காத வத்தலகுண்டு காவல்துறையினரை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்த
Woman


திண்டுக்கல், 02 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் அருகே தனது கணவரை தாக்கிய நபர்கள் மீது நான்கு நாட்களாக நடவடிக்கை எடுக்காத வத்தலகுண்டு காவல்துறையினரை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல், வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு புதுப்பட்டி சேர்ந்த கிராம மக்கள் மாறுவேடம் அணிந்து வத்தலக்குண்டு வரை ஊர்வலமாக வந்தனர்.

அப்போது புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் முத்துராமன் மற்றும் அவரது நண்பர் பிரசன்னா ஆகியோர் போதையில் பெண்களை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அதே ஊரை சேர்ந்த கருப்பையா அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளார்.

அப்போது ராணுவ வீரர் முத்துராமன், பிரசன்னா ஆகியோர் கருப்பையாவை தலையில் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

கருப்பையா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் ராணுவ வீரர் முத்துராமன், பிரசன்னா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இங்கிலீஷ் கருப்பையாவின் மனைவி பூமாதேவி இரண்டு பேரையும் கைது செய்ய கூறி வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு சாலையில் தனது மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN