கட்சியினரை அரவணைத்துச் செல்வதே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா லட்சியம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தல்
மதுரை, 02 ஜூன் ( ஹி.ச.) அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று (02/06/26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். த
கட்சியினரை அரவணைத்துச் செல்வதே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா லட்சியம் -  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தல்


மதுரை, 02 ஜூன் ( ஹி.ச.)

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று (02/06/26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து, அவர்களை அரவணைத்துச் செல்வதே தலைமையின் முதன்மைக் கடமை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் உன்னத நோக்கம் நிறைவேற வேண்டும்.

அவர்களின் கனவை நனவாக்க வேண்டுமானால், கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மட்டுமே தொண்டர்கள் உற்சாகத்துடன் களப் பணியாற்றுவர்.

கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைந்து, தொண்டர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தலைவர்களுக்கு உள்ளது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக வலுவான வெற்றிப் பாதையில் செல்ல, அரவணைப்பு அரசியலே அடித்தளம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b