சென்னையில் இளைஞர் கொலை, தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
Eps


Jj


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக்கேட்டால் கொலைதான் இந்த ஆட்சியின் பதிலா? இதுதான் மாற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அரசு பொறுப்பேற்காமல் நழுவ முயற்சிப்பதாகவும், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப் படை” திட்டத்தை குறிப்பிட்ட அவர், அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் அதன் தொடக்க விழா ஏன் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி அருகே நடைபெற்றதாகக் கூறப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளையும் சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த சில வாரங்களாக ஆளுங்கட்சி நிர்வாகிகள் பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தன் கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாத ஒருவர் காவல்துறையை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் முதன்மைப் பொறுப்பு என்றும், முதல்வர் தனது பொறுப்பின் தன்மையை உணர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ