திருநெல்வேலியில் ஜூன் 4 முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி, 02 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. 2026 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை TNPSC
Free Coaching for TNPSC Group 1 Exam


திருநெல்வேலி, 02 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. 2026 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.

இதன்படி 2026 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்விற்கான அறிவிக்கை ஜுன் மாதம் வெளியாகும் எனவும் எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

வரவிருக்கும் குரூப்-I தேர்வுக்கு மாணவர்கள் முன்கூட்டியே தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து குரூப்-I தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 04.06.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார்.

இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன. NELLAI EMPLOYMENT OFFICE என்ற TELEGRAM CHANNEL-இல் இணைந்து பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் ரோடு, ரயில்வேகேட் அருகில், குலவணிகர்புரம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 04.06.2026 அன்று காலை 10.30 மணிக்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு 9499055929 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b