Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,180க்கும், ஒரு சவரன் ரூ.97,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Hindusthan Samachar / VINOTH KUMAR P