வெற்றிப் பேரணி நடைபெறாது - ஆர்சிபி அணி அறிவிப்பு
பெங்களூர் , 02 ஜூன் (ஹி.ச.) 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, இந்த ஆண்டு வெற்றிப் பேரணி நடத்தப்படாது என்று அறிவித்துள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி
A


பெங்களூர் , 02 ஜூன் (ஹி.ச.)

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, இந்த ஆண்டு வெற்றிப் பேரணி நடத்தப்படாது என்று அறிவித்துள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஆர்சிபி தனது 2-வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதையடுத்து ரசிகர்கள் வெற்றிப் பேரணிக்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு பேரணியை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு சிறப்பு பாராட்டு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு ரசிகர்கள் முன்னிலையில் கவுரவம் அளிக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட நிகழ்வின் போது ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு சவால்கள் உருவாகி துயர சம்பவமும் நிகழ்ந்தது. அந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு வெற்றிப் பேரணியை தவிர்க்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA