இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து - முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என
இளையராஜா


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த மதிப்பின் காரணமாக, தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர் இளையராஜா என்றும், அவருக்கு ‘இசைஞானி’ என்ற பட்டத்தை தலைவர் கலைஞர் சூட்டியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இளையராஜாவின் இசைப் பயணத்தைப் பாராட்டிய மு.க. ஸ்டாலின், “அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்!” என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த பதிவு, இசையமைப்பாளர் இளையராஜாவின் கலைப்பங்களிப்பையும், அவருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையேயான மரியாதை உறவையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam