Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், இசைஞானியுமான இளையராஜாவின் 84-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இளையராஜாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாகவே ஒவ்வொருவருடனும் அதிக நேரம் இணைந்திருப்பது தான்.
அவரது இசைப் படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனச் சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு இலவச மருத்துவமாக அவரது இசை விளங்குகிறது என பாராட்டியுள்ளார்.
அத்துடன், இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். அவர் நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து, தனது இசையால் இனி வரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam