JEE இல்லாமல் ஐஐடியில் பட்டப்படிப்பு - விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாள்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச) சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) சார்பில், JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் பட்டப்படிப்பில் சேரும் வகையில் பல்வேறு இணையவழி இளநிலை அறிவியல் (BS) படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தரவியல் மற்றும் பயன்ப
Iit


சென்னை, 02 ஜூன் (ஹி.ச)

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) சார்பில், JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் பட்டப்படிப்பில் சேரும் வகையில் பல்வேறு இணையவழி இளநிலை அறிவியல் (BS) படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், தரவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணு அமைப்புகள், மேலாண்மை மற்றும் தரவியல், வானூர்தி மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவன மாணவர்களும், பணிபுரிபவர்களும் இணையவழியில் இந்தப் படிப்புகளை பயிலக்கூடிய வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் முதலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் சென்னை ஐஐடி வழங்கும் பயிற்சியில் பங்கேற்று, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பு வழங்கப்படும்.

விருப்பமுள்ள மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழிப் பட்டப்படிப்பு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 4, 2026 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் இறுதி நேரத்தைத் தவிர்த்து முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ