Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 ஜூன் (ஹி.ச)
திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது,
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறியுள்ள கனிமொழி, பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள தற்போதைய சூழ்நிலையில், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள்தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்படப் போவது எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசியல் வட்டாரங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
திருவைகுண்டம் சம்பவத்தை முன்வைத்து தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தரப்பில் இருந்து எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்வி, மாநில அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ