Enter your Email Address to subscribe to our newsletters

கோல்கத்தா , 02 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் (TMC) எம்எல்ஏக்களின் முக்கிய கூட்டம் நடைபெற இருந்த நிலையில், போதிய பங்கேற்பு இல்லாததால் திடீரென ரத்து செய்யப்பட்டது.
மொத்தம் 80 எம்எல்ஏக்களில் சுமார் 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பின்னடைவு, கட்சி அமைப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி ஆலோசிக்கவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலான எம்எல்ஏக்கள் வராததால் கூட்டம் நடத்த முடியாமல் போனது.
இதுகுறித்து கட்சி தரப்பில், மாவட்டங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள், கைது செய்யப்பட்ட கட்சித் தொண்டர்களுக்கு உதவுவது போன்ற பணிகளில் எம்எல்ஏக்கள் ஈடுபட்டிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த நிகழ்வு TMC-இல் உள்பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
எனினும், கட்சி இதை தற்காலிக சூழ்நிலை என கூறியுள்ளது..
Hindusthan Samachar / M.DEEPAK RAJA