Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 02 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்றதாக கூறப்படும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர், தன்னை தாக்கியவர்கள் ஜாதி பெயரை கூறி தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், தாக்குதல் சம்பவம் மற்றும் இளைஞர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தென்காசி - நெல்லை பகுதிகளில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam