தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு - கல்விக் கட்டண விவரங்கள் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச) தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார
School


சென்னை, 02 ஜூன் (ஹி.ச)

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி நிர்வாகங்கள் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள தகவல் பலகையில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்விக் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில், அதற்கான புகைப்படங்களை எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு

(தனியார் பள்ளிகள்) அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், தங்களது மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்விக் கட்டண விவரங்கள் முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் தனியார் பள்ளிகளின் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு, பெற்றோர்களின் புகார்கள் குறையும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ