சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுகள் கண்காணிப்புக்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) பதிவுத்துறையில் ஆவணப் பதிவுகளை கண்காணித்தல் மற்றும் Project STAR 3.0 திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவதற்காக இரண்டு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் ஜி.கே. அருண் சுந்தர
சார்பதிவாளர்


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

பதிவுத்துறையில் ஆவணப் பதிவுகளை கண்காணித்தல் மற்றும் Project STAR 3.0 திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவதற்காக இரண்டு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, Project STAR 2.0 திட்டத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் Project STAR 3.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு சேவை வழங்கலை மேம்படுத்துதல், நிர்வாக செயல்திறனை உயர்த்துதல் மற்றும் பதிவுத்துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டத்தின் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு, செயல்படுத்தல் மற்றும் முன்னேற்றப் பணிகளை உறுதி செய்யும் வகையில் உடனடி அமலுக்கு வரும் வகையில் அதிகாரிகள் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,பி. கண்ணன், உதவி தலைமைப் பதிவாளர் (விழிப்புப் பணி) மற்றும் இ. பவானி, மாவட்டப் பதிவாளர் (வழிகாட்டுதல்) ஆகியோர் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P