தெலுங்கு மக்கள் எப்போதும் ஒன்றே - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத், 02 ஜூன் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலத்தின் 12வது உருவாக்க தினத்தை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உபய தெலுங்கு மாநில மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை செய்தியில், ஆந்திரப்
T


ஹைதராபாத், 02 ஜூன் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலத்தின் 12வது உருவாக்க தினத்தை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உபய தெலுங்கு மாநில மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை செய்தியில்,

ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் புவியியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், தெலுங்கு மக்கள் எப்போதும் ஒன்றே என அவர் வலியுறுத்தினார்.

இரு மாநிலங்களும் வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹைதராபாத் மற்றும் அமராவதி நகரங்கள் உலகத் தரத்தில் சிறந்த நகரங்களாக உருவாக வேண்டும் என்ற தனது ஆசையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், ஒவ்வொரு தெலுங்கு குடும்பமும் வளர்ச்சியின் பலன்களை பெற வேண்டும் என்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விக்சித் பாரத் 2047” இலக்கை அடைய இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், உலகளவில் தெலுங்கு மக்களின் புகழை உயர்த்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA