Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 02 ஜூன் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலத்தின் 12வது ஆவிர்பாவ தினத்தை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், அங்குள்ள மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் அவர் கூறியது :
தெலங்கானா உருவாக்கம் நீண்ட கால மக்கள் போராட்டத்தாலும், பலரின் தியாகத்தாலும் கிடைத்தது என்று அவர் நினைவுகூரினார்.
தெலங்கானா என்பது அனைத்து மக்களின் தீர்மானமும், அமரர்களின் தியாகத்தின் வடிவமும்” என அவர் குறிப்பிட்டார். கவிஞர் தாசரதி கிருஷ்ணமாசார்யாவின் “நா தெலங்கானா கோடி ரத்னால வீண” என்ற புகழ்பெற்ற வரியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்மக்கா–சரலம்மா தெய்வங்களின் தைரியம் முதல் கொமரம் பீம் வீரத்துவரை, தெலங்கானா மண் எப்போதும் நீதி மற்றும் உரிமைக்காக போராடியதாக பவன் கல்யாண் பாராட்டினார்.
இந்த மண்ணின் காற்றில் தைரியமும், நீரில் போராட்ட உணர்வும், மண்ணில் தியாகிகளின் ரத்தமும் கலந்துள்ளது என அவர் உணர்வுபூர்வமாக கூறினார்.
அதே நேரத்தில், ஐ.டி., மருந்துத் தொழில், ஸ்டார்ட்அப் மற்றும் கல்வித் துறைகளில் தெலங்கானா பெற்றுள்ள வளர்ச்சியை அவர் பாராட்டினார். ஆனால், வளர்ச்சியின் பலன்கள் கடைசி மனிதருக்கும் சென்றடையும்போதுதான் அது உண்மையான முன்னேற்றமாகும் என அவர் வலியுறுத்தினார்.
கிராமப்புற மக்கள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும், தெலங்கானா மாநிலம் சமூக நீதி மற்றும் முழுமையான வளர்ச்சியுடன் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA